BDCM

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ

Seerthiriyega Vasthe Namo Namo

Seerthiriyega vasthe namo namo nin
Thiruvadikku namasthe namo namo (2)
Paarpadaithaalum naathaa
Parama sarpirasaathaa (2)
Naruru thooyavethaa namo namo namo !

1. Tha‌nthai pa‌raaba‌ra‌nae namo namo emai
Thaangi aatha‌riponae namo namo ! (2)
Sontha‌ kumaara‌n tha‌nthaay
Solla‌rum na‌la‌meenthaay (2)
Entha‌vir pokumenthay namo namo namo !

2. Enga‌l pa‌va‌thinaasaa namo namo ! puthu
Erusalaem nagarraasaa namo namo ! (2)
Engum nin arasera
Evarum nin pugalkoora‌ (2)
Thunga manthaiyir sera namo namo namo !

3. Parisutha aavithaevaa namo namo thida‌
Palamali themaikkaavaa namo namo ! (2)
Karisithuthaa narbuthi
Kabadatta manasuthi (2)
Thirumoli pattumbakthi namo namo namo !

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ ! (2)
பார்படைத்தாளும் நாதா
பரம சற்பிரசாதா (2)
நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ !

1. த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத்
தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ ! (2)
சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய்
சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய் (2)
எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ !

2. எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ ! (2)
எங்கும் நின் அரசேற
எவரும் நின் புகழ்கூற‌ (2)
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ !

3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட‌
பலமளித் தெமைக்காவா நமோ நமோ ! (2)
கரிசித்துத்தா நற்புத்தி
கபடற்ற மனசுத்தி (2)
திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ !

SONGS

About Us

About Us